சுவையான ஃபிர்னி செய்வது எப்படி ?

ஃபிர்னி என்பது அரிசி, பால் மற்றும் குங்குமப்பூ சேர்ந்த சுவையான ஒரு உணவு தான் ஃபிர்னி.

தேவையான பொருட்கள்

  • பால் – 1 லிட்டர்
  • ஏலக்காய் பொடி – 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பொடி
  • அரிசி ஈர மாவாக தண்ணீர் சேர்த்து அரைத்தது – 100 கி.
  • சர்க்கரை – 6 மேசைக்கரண்டி
  • குங்குமப்பூ – ஒரு துளி ( மென்சூடான நீரில் இட்டு கலக்கப்பட்டது )
  • நறுக்கிய பிஸ்தா – 1/2 தேக்கரண்டி

செய்முறை

பால் மற்றும் ஏலக்காய் பொடியை ஒரு வாணலியில் இட வேண்டும், பின்னர் கொதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். அரிசி மாவை அதில் சேர்த்து, அது வேகும் வரையும் பால் கெட்டிப்படும் வரையும் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.

Image result for ஃபிர்னி

அதன்பின் சர்க்கரை சேர்த்து, அது கரையும் வரை தொடர்ந்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். அது குளிர்வதற்கு தனியாக வைக்க வேண்டும். பின் குங்குப்பூவை இட்டு கலக்க வேண்டும். மண் அச்சுகளில் ஊற்றி குளிர்விக்க வேண்டும். மேலே பிஸ்தாவை தூவி, ஜில்லென்று பரிமாறவும். இப்பொது சுவையான ஃபிர்னி தயார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment