யாரையும் அடக்க விடாமல் சீறிய கொம்பன் காளைகள்..வீரர்கள் திணறல்- ஜல்லிகட்டு ஜாலிகள்

  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகள் சீறி பாய்ந்தன
  • சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகளை யாராலும் அடக்க முடியவில்லை

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 8 மணிக்கு பதில் காலை 7 மணிக்கே தொடங்குகிறது .ஜல்லிக்கட்டில்  700 காளைகள் 926  மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அலங்கநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில் உறுதிமொழியை ஆட்சியர் வாசிக்க மாடுபிடி வீர்கள் உறுமொழி ஏற்புடன் ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் ஆர்பி உதயகுமார், ஆட்சியர் வினய் மற்றும் கண்கானிப்பு குழுவின் ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் இந்த போட்டியை துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. முதலில் கோவில் காளைகள் விழ்த்துவிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்தது காளைகள் அதனை அடக்க வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டியில்  3 காளைகள் கெத்து காட்டியது.அந்த 3 காளைகள் சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன் மற்றும் கருப்பு கொம்பன் இந்த மூன்று காளைகளும் களத்தில் நின்று கட்டி விளையாடியது.

Image

தன் அருகே எந்த  வீரரையும் நெருங்க விடாமலும் அருகே வந்தவர்களை தூக்கி வீசி களத்தில் கெத்து காட்டியது. இதனால் இந்த மாடுகளை எந்த வீரரும் பிடிக்க முடியாததால் மாடுகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்த 3 காளைகளும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
kavitha