சியான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஓர் மாஸ் படம்…!!

வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். டியூ செலுத்தாதவர்களின் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூங்குவதில் விக்ரம் சிறப்பானவர். ஐயர் பெண்ணாக வரும் தமன்னாவை விக்ரம் துரத்தி துரத்தி காதலிக்கிறார். மறுபக்கம் எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதலும் நடக்கிறது.

இதற்கிடையில், பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க விடாமல், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடன், மீதி கதையை காட்டியுள்ளார் இயக்குனர் என்பது பாராட்டகூடியது. விக்ரம் இப்படத்தில் மக்களிடையே பெரும் கைதட்டல்களை தனது நடிப்பிற்கு பெறுகிறார்.

தமன்னா அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நல்ல விதத்தில் செய்துள்ளார். சென்ட்டிமெண்ட் காட்சிகளை சரியாக கையாண்ட விதம் சூப்பர். தமன் இசையில் பாடல்கள் ஒவ்வோன்றும் சூப்பராக உள்ளன. குறிப்பாக டைட்டில் பாடல் மற்றும் தீம் பாடலும் ரசிகர்களை ஆட வைக்கிறது. மொத்தத்தில் சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படம் ஓர் மாஸ் படம்.
இப்படத்தின் டீஸர்
https://youtu.be/ddRyInAwFl0

author avatar
Dinasuvadu desk

Leave a Comment