சியான் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ‘அட்சிபுட்சி’ எனத்தொடக்கும் பாடலானது வெளியானது,மேலும் அப்படத்தின் புதிய போட்டோஸ் அப்டேட்ஸ்

சியான் விக்ரம் நடிப்பில் விரைவில் வரவிருக்கும் திரைப்படம் ‘ஸ்கெட்ச்’ இப்படத்தை சிம்புவை வைத்து வாலு படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கியுள்ளார். இப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்து இதன் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து வருகிறது.

 

இப்படத்தில் சியான் விக்ரமுக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இரண்டு பாடல்களை விக்ரம் பாடியுள்ளதாக தமன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இந்த மாதம் இறுதியில் வெளியிட உள்ளதாகவும் தமன் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சித்ஸ்ரீராம் , ஸ்வேதா மேனன், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.மேலும் இப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என இப்படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி எஸ்.தாணு தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு தமன் இசையமைக்கிறார், ஆண்டனி.எல்.ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தை ‘மூவிங் ஃப்ரேம்’ என்ற புதிய நிறுவனத்துடன் இணைந்து கலைப்புலி.எஸ்.தாணு தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வி கிரியேஷன்ஸ்’ மூலம் தயாரித்து வருகிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் ‘அட்சிபுட்சி’ எனத்தொடக்கும் தனிப்பாடலானது வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழு அறிவித்திருந்தது.இதனையடுத்து நேற்று அப்பாடலானது வெளியிடப்பட்டது.இதனை ரசிகர்கள் facebook மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் #ChiyaanVikram #AtchiPutchi #Sketch எனப்பதிவிட்டு டிரென்ட்   செய்து கொண்டாடி வருகின்றனர். பொங்கல் ரேஸில் சியான் விக்ரமின் “ஸ்கெட்ச்” படமும் இணையும் என்பதில் எந்த மாற்றமும் இருக்காது என இந்த அறிவிப்புகள் நமக்கு தெரிவிகின்றன.இதனால் சியான் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாட தயாராக உள்ளனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment