சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா ? இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம்  21 ஆம் தேதி  ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.கைது செய்யப்பட்ட பின் சிதம்பரம்  திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதனை தொடர்ந்து ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது.பின்னர் சிதம்பம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனால் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக  ஜாமீன் கோரி, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
இதனால்  அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில்  சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.அப்போது  சிதம்பரம் ஜாமீன் வழக்கில் அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .மேலும் வழக்கின் விசாரணை இன்று ( 26-ஆம் தேதி) நடைபெறுகிறது.
ஏற்கனவே சிபிஐ வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.