சிங்கத்தின் வேட்டை பாலிவுட்டில் இன்னும் தொடர்கிறது! ரன்வீர் சிங்கின் 'சிம்பா' பட ட்ரைலர்!!

பாலிவுட்டில் படு கமர்ஷியலாக, மசாலா படங்களை எடுக்கும் பாலிவுட்டின் ஹரி என்று இவரை சொல்லலாம். இவர் யாருமல்ல, சென்னை எக்ஸ்பிரஸ், சிங்கம் 1, சிங்கம் ரிட்டர்ன்ஸ் படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி. இவர் அடுத்ததாக ரன்வீர் சிங்கை வைத்து சிம்பா எனும் படத்தை எடுத்துள்ளார்.
இந்த படத்தில் சிங்கம் படத்தின் தொடர்ச்சி என காட்டாமல் அத்தனையும் இந்த படத்தில் சம்பந்தப்படுத்தி எடுத்துள்ளனர். இந்த படத்தில் சிங்கம் (ஹிந்தி) படத்தில் நடித்த அஜய் தேவ்கானும் நடித்துள்ளார். கமர்ஷியலாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment