சமூக வலத்தளங்களில் அப்ரிடியை விளாசிய இந்தியர்கள் ..!மீண்டும் காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து …!

இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர், என்றும் சுயநிர்ணய உரிமை தேவை என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரீடி  ட்வீட் செய்துள்ளது பரபரப்பாகியுள்ளது.

அவர் தனது ட்விட்டரில், “இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியினால் காஷ்மீர் சுய நிர்ணய உரிமை, விடுதலைக் குரல்களை ஒடுக்க காஷ்மீரில் அப்பாவிகள் பலியாகின்றனர். எங்கே சென்றது ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள், இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை?” என்று ட்வீட் செய்துள்ளார்.

காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் 13 தீவிரவாதிகளைச் சுட்டுக் கொன்ற பிறகு ஷாகித் அப்ரீடியின் டிவீட் வெளியாகியுள்ளது. இதே சண்டையில் 3 ராணுவ வீரர்கள் 4 அப்பாவிப் பொதுமக்களும் பலியானார்கள்.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் அடையாளம் காணப்பட்ட இருவர் ரயீஸ் அகமட் தோக்கர், இஷ்பாக் அகமட் மாலிக் ஆகியோர்களாவர். இவர்கள் இருவர் மே 2017-ல் ராணுவ அதிகாரி உமர் ஃபயாஸை அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த இந்தியாவின் ஒரு பகுதியே காஷ்மீர் என்பதுதான் இந்தியத் தரப்பாகும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று கூறப்படுவது போல் இவரும் இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என்று ட்வீட் செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment