சபரிமலை ஐயப்பன் கோவில் பெயரில் எந்த மாற்றமும் இல்லை..!!

 
சபரி மலை ஐயப்பன் கோவிலின் பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்துள்ளனர். கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலை திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலின் முழுப்பெயர் ‘சபரிமலை தர்மசாஸ்தா கோவில்’ ஆகும். இந்த கோவிலின் பெயரை ‘ஸ்ரீ அய்யப்ப சுவாமி கோவில்’ என மாற்ற அவர்கள் முடிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், இது தொடர்பாக சில விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இந்த பெயர் மாற்ற முடிவை ரத்து செய்ய தேவசம்போர்டு முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment