சபரிமலை செல்லும் பெண்களுக்கு இனி வயது சான்றிதழ் அவசியம்

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் 10 வயதுக்கு உட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்கொண்ட பெண்கள் வயது சான்றிதழ் சமர்பிக்க வேண்டும் என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஏன் பெண்களை அனுமதிக்க மறுக்கிறார்கள் என்ற கேள்வி பல காலமாக நிலவி வருகிறது. இது குறித்து உச்சநீதிமன்றம் கேரள மாநில அரசிடமும், திருவாங்கூர் தேவசம் போர்டிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், திருவாங்கூர் தேவசம் போர்டு வெளியிட்டுள்ள செய்தியில், “வயதினை கணக்கு வைத்து இங்கு அனுமதிக்கப்பட்ட பெண்கள் வரும் போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கிடையில் “தேவையற்ற வாதங்களை தவிர்க்க” மாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 வயதுக்குட்பட்ட மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களது வயது சான்றிதழை காண்பிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைள் துவங்கும்” என்று தெரிவித்துள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment