சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துவரும் ‘வீரமாதேவி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘வீரமாதேவி’. ஹீரோயினை முன்னிலைப்படுத்திய இந்தப் படத்தில், சன்னி லியோன் பிரதான பாத்திரத்தில் நடித்து வருகிறார். நாசர், நவ்தீப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அம்ரிஷ் இசையமைக்க, பொன்செ.ஸ்டீபன் தயாரிக்கிறார்Image result for வீரமாதேவி

வரலாற்றுப் படம் என்பதால், இந்தப் படத்துக்காக வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை கற்றுக்கொண்டு, அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சன்னி லியோன். அதுமட்டுமின்றி, இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகி வருகிறது

இந்தப் படத்துக்குப் பிறகு என்னுடைய அடையாளம் நிச்சயம் மாறும். ஆக்‌ஷன் காட்சிகளில் நடிக்க எனக்கு எப்போதுமே பிடிக்கும். இந்த மாதிரி கதைகளுக்காக சில வருடங்களாகவே காத்திருக்கிறேன். வி.சி.வடிவுடையான் இந்தக் கதையை எனக்கு சொன்ன போதிலிருந்தே நான் படத்துக்கு தயாராக ஆரம்பித்து விட்டேன்” என்கிறார் சன்னி லியோன்.Image result for வீரமாதேவி

இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று வெளியாகியுள்ளது. அதில், குதிரையில் அமர்ந்துகொண்டே சன்னி ஆவேசமாக சண்டை போடுவது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. போர்க் கவசங்கள் அணிந்து, அழகிய ராணி போலக் காட்சியளிக்கிறார் சன்னி லியோன்

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *