சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் திரைவிமர்சனம்…!

நடிகர் சந்தானம் மக்கள் மனதில் தான் ஒரு காமெடியனாக பதிந்து விட்டார். தற்போது அதனை ஹீரோவாக பதிய வைக்கும் முயறிச்சியில் முழு மூச்சாக இறங்கி செயல்பட்டு வருகிறார். சந்தானம் ஒரு நடுத்தர குடும்பத்து பையன். அப்பா விடிவி கணேஷ்க்கு ஒரே பிள்ளை. அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. சேதுவின் மனைவியான சஞ்சனா சிங் சென்னையில் பெரிய டானான பவானி சம்பத்துக்கு தங்கை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர், இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தவரை தீர்த்து கட்ட வலை வீசி தேடுகிறார்கள். அப்போது பெங்களூரு டான் சத்யாவின் தங்கையாக வரும் வைபவியை சந்திக்கிறார். இதனிடையே, மர்ம கும்பல் ஒன்று வைபவியை கொலை செய்ய தேடி வர, பவானியின் உதவியை நாடுகிறார் வைபவி. பவானிக்கும் வைபவிக்கும் என்ன தொடர்பு, அவரை கொலை செய்ய அடியாட்களை ஏவியது யார், சந்தானம் தன் காதலில் ஜெயித்தாரா என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தின் பாடல்கள் சொல்லும்படி ஒன்றும் பெரியதாய் இல்லை. படத்தில் பல காமெடியன்கள் இருந்தாலும், விவேக்கின் காமெடி தான் சற்று எடுப்படுகிறது. போலீஸ் கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தாலும் போலீஸ் தானா என்ற கேள்வியை மனதுக்குள் எழுப்புகிறது. மொத்தத்தில் ‘சக்க போடு போடு ராஜா’ சபாஷ் சொல்லும்படி ஒன்றுமில்லை.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment