சதய விழாவில் ஷாக்……..சடணாக பாய்ந்த ஜஜி……!!!1033_வது ஆண்டுவிழாவில் நடந்த ரெய்டு…..!!!

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1033வது சதயவிழா நடைபெற்றுவரும் நிலையில் கோயிலில்சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர், தொல்லியல் துறையினரும் ஆய்வு நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாமன்னர் ராஜராஜன் சோழன், அவரது மனைவி லோகாமா தேவி சிலைகள் உட்பட பல சிலைகள் தஞ்சை பெரியகோவிலில் காணாமல் போனதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணையை முடிக்கிவிட்டது.
Image result for tanjore bragatheeswarar temple pon manickavel

பழம்பெருமைவாய்ந்த காணாமல் போன இந்த சிலைகளை கடத்தி குஜராத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்ததையறிந்தை கண்டுபிடித்த போலீஸார் சிலைகள் 2டையும் மீட்டனர்.

இதுவே ஜிரணிக்க முடியாத நிலையில் தஞ்சை பெரியகோவிலில் உள்ள மேலும் 42 சிலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

Related imageஅதன்பேரில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ராஜாராம், தொல்லியல் துறை இணை இயக்குநர் நம்பிராஜன் ஆகியோர் தலைமையில்  தஞ்சை பெரிய கோயிலில் 4ம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

Related image

இந்த ஆய்வில் சிலைகளின் உயரம், அகலம், எடை, தொழில்நுட்ப ரீதியில் ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். தஞ்சை பெரியக்கோயிலில் சதய விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆய்வு நடைபெற்று வருவது பக்தர்கள், சுற்றுலா பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ராஜராஜசோழனின் 1033வது சதயவிழா நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment