கௌரவ விரிவுரையாளர்களு சிறப்பு தேர்வு மூலம் உதவி பேராசிரியர் பணி! அரசு தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வையும் கேட்டு அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக தமிழக கலை கல்லூரிகளில் காலியாக உள்ள 647 காலி பணியிடங்களை நிரப்ப அரசு சிறப்பு தேர்வு ஒன்றை நடத்தி அதன் மூலம் கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணி நியமனம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறதாம்.
விரைவில், கௌரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் உதவி பேராசிரியராக நியமிக்கும்படியான பணி நியமனம் செய்யும் ஆணை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.