கேப்டன் கோலி மற்றும் தேர்வு குழுவினர் மீது அதிருப்தி…இந்திய வீரர் பரபரப்பு பேட்டி…!!

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணி இரண்டு கட்டமாக அறிவிக்கப்படும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டிருந்தது.அதன்படி முதல் இரண்டு போட்டிக்கான அணியை அறிவித்து வெற்றி,தோல்வியை வீரர்களின் செயல்பாடு போன்றவற்றை ஆராய்ந்து கடைசி மூன்று போட்டிகளுக்கான அணி வீரர்களின் பட்டியலை வியாழனன்று அறிவித்தது.
ஆசியக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் முதல் கட்ட ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவில்லை.இரண்டாம் கட்டத்தில் தேர்வாகுவார் என அதிகம் எதிர்பார்த்த நிலையில் புவனேஷ்வர் குமார், பும்ரா மட்டுமே புதிதாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.கேதர் ஜாதவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.இந்நிலையில்,விண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கு என்னை ஏன் தேர்வு செய்யப்படவில்லை என இந்திய வீரர் கேதர் ஜாதவ் புலம்பியுள்ளார்.
இதுகுறித்து கேதர் ஜாதவ் மேலும் கூறியதாவது,”தேர்வுக்குழுவின் திட்டம் என்ன என்பது புதிராகவே உள்ளது.அவர்களிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லையென்பதால் வேறு வழியின்றி ரஞ்சிக்கோப்பையில் விளையாட முடிவு செய்துள்ளேன்”
தோனி கேப்டனாக இருந்த காலத்தில் தேர்வுக் குழுவின் முடிவை அனைத்து வீரர்களும் எவ்வித பாரபட்சமின்றி புன்னகையுடன் ஏற்றுக் கொண்டனர்.ஆனால் கோலி கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,கேப்டன் கோலி மற்றும் தேர்வு குழுவினர் மீது இந்திய கிரெடு வீரர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment