குமாரசாமி அரசு ஒரு குழந்தை மாதிரி இருக்கிறது..!விரைவில் ஆட்சி மாற்றம்.!!மத்திய அமைச்சர் ஆனந்தகுமார்..!!

கர்நாடகவில் விரைவில் ஆட்சி மாற்றம் நடைபெறும் என்று மத்தியஅமைச்சர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கர்நாடகாவில்  மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை. அரசு செயல்படாமல் இருக்கிறது என்று அந்த கட்சியினரே அதிருப்தியில் உள்ளனர். இதனையே தெரிவிக்கும் விதமாக முன்னாள் முதல்வர் சித்தராமையா அண்மையில் வெளிப்படுத்தி உள்ளார். மீண்டும் முதல்வராக வேண்டும் என துடிக்கிறார்.
மேலும் குமாரசாமி அரசு வளராத ஒரு குழந்தையாக இருக்கிறது. மந்திரி சபை விரிவாக்கம், துறை ஒதுக்கீடு உள்ளிட்டவை இன்னும் நடைபெறாமல் இருக்கின்றன.    2 கட்சிகளுக்கு இடையே வெளிப்படையாகவே கடும்மோதல் நடந்து வருவது அனைவருக்கும் தெரிகிறது. இந்த கூட்டணியை மக்கள் விரும்பவில்லை. இதனால் தான் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்த கூட்டணி விரைவில் கவிழும் கவிழ்ந்தவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. தேர்தலில் மக்களின் ஆதரவை பெற்ற பாரதிய ஜனதா ஜனநாயக தன் கடமையை , கர்நாடகத்தில் சிறப்பாக ஆட்சி நடத்தும்.இவ்வாறு கூறினார்.
DINASUVADU
 

author avatar
kavitha

Leave a Comment