குடியுரிமை சட்ட மசோதா- தீர்மானம் தோல்வி..! தேர்வுக் குழுவுக்கு அனுப்ப எதிர்ப்பு

குடியுரிமை மசோதா அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு எதிராக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது குறித்து மாநிலங்களவையில் வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்தது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை தேர்வுக் குழுவிற்கு அனுப்பும் முடிவு பற்றி ராஜ்யசபாவில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. டிவிஷன் முறையில் நடந்த வாக்கெடுப்பில் தேர்வு குழுவிற்கு அனுப்ப வேண்டாம் என 113 ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது. குழுவிற்கு அனுப்ப வேண்டும் என 92 ஓட்டுக்கள் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குடியுரிமை மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் தீர்மானம் தோல்வி அடைந்த அடுத்து குடியுரிமை மசோதா வாக்கெடுப்பை புறக்கணித்து மாநிலங்களவையில் இருந்து சிவசேனா வெளிநடப்பு செய்தது.

author avatar
kavitha