தமிழரின் பெருமையை உணர்த்தும் கீழடி! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #கீழடி_தமிழர்_நாகரிகம்

ட்விட்டரில்  #கீழடி_தமிழர்_நாகரிகம் என்ற ஹாஸ் டேக்  ட்ரெண்டிங்காகி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே இருக்கும் கீழடி பகுதியில் தொல்லியல் துறையின் அகழ்வாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த ஆய்வில் கிடைக்கும் பொருட்கள் உலக புகழ் பெற்ற ஆய்வு  மையங்களில் வைத்து ஆய்வு செய்யப்படுகின்றது.

அந்த வகையில் அமெரிக்காவை ​சேர்ந்த பீட்டா என்ற நிறுவனத்தில் கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள்  சோதனை செய்யப்பட்டது.சோதனையின் முடிவில் தமிழர் நாகரிகம் குறைந்தது 2600 ஆண்டுகள் பழமையானது என்பது  கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழரின் வரலாற்றை வெளிக்கொண்டு வந்த கீழடி அகழாய்வுகள் தொடர்பான #கீழடி_தமிழர்_நாகரிகம் என்ற ஹாஸ் டேக்  ட்விட்டரில் ட்ரெண்டிங்காகி வருகிறது.