காற்று மாசுபாட்டை கண்டறியும் கருவிகள் தமிழகத்தில் பொறுத்தப்படவுள்ளன ..

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் உள்ளன.அவை வெளியேற்றும் புகையினால் காற்று மாசுபடுகிறது இல்லையா என்பதை கண்டறிய தமிழகத்தில் 30 இடங்களில் ரூபாய் 50 லட்சம் செலவில் காற்று மாசுபாட்டு அளவை கண்டறியும் கருவி பொருத்தப்பட உள்ளது என்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இக்கருவிகள் 24 மணி நேரமும் காற்று மாசுபடுகிறதா என்பதை கண்காணிக்கும் அதில் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் ஏதேனும் குறைகள் தெரிவிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட தொழிற்சாலைக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

குறைகளை சரிசெய்ய  கால அவகாசம் வழங்கப்படும் அவ்வாறு அதனை தாண்டியும் சரிசெய்யவில்லை என்றால் அந்த தொழிற்சாலைக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment