கருஞ்சீரகம்னு சாதாரணமா நெனச்சீராதீங்க…!! அது எப்படிப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டது தெரியுமா….?

நமது சமையல் அறைகளில் சீரகம் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது. சீரகம் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் கறுசீரகம் பற்றி அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த கருஞ்சீரகத்துக்கு சர்வ ரோக நிவாரணி என்ற செல்லப் பெயர் ஒன்று உண்டு.

Related image

கருஞ்சீரகம் அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டது என்பதாலேயே இப்படி அழைக்கப்படும் பெருமை பெற்றிருக்கிறது . மூன்று மூலை வடிவத்தோடு, சிறுவடிவத்திலுள்ள இது கருமை நிறமுடையதாக இருப்பதால் கருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிறது.

சத்துக்கள் :

கருஞ்சீரகம் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு, புரதப்பொருட்கள் மற்றும் முக்கியமான அமினோ அமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் ஆவியாகாத தாவர கொழுப்பு எண்ணெய், புரதங்கள், ஆல்கலாய்டுகள், சப்போனின் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான எண்ணெய் பொருட்கள் உள்ளன.

நச்சுக்களை அழிக்கிறது :

Related image

கருஞ்சீரகப் பொடியினை காடியுடன் கலந்து உட்கொள்ள குடலிலுள்ள புழுக்கள் வெளியேறும். இதனையே 3 முதல் 7 நாட்கள் வரையில் காலை 1/2 கிராம், மாலையில் 4 கிராம் வீதம் Rabies என்கிற வெறிநாய்க்கடி மற்றும் இதர நச்சுக்கடிகளின் நஞ்சை நீக்குவதற்கும் கொடுக்கலாம்.

வலி மற்றும் வீக்கத்தை போக்குகிறது :

Image result for வலி மற்றும் வீக்கத்தை போக்குகிறது :

கருஞ்சீரகத்தோடு வெந்நீர் விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச தலைவலி, கீல்வீக்கம், உடல் வீக்கம் போன்றவை குணமடையும். இதோடு காடி விட்டரைத்து படைகளுக்கும் பூசலாம். இதனுடன் தேன் விட்டரைத்து பிள்ளை பெற்றபின் வருகிற வலிக்குப் பூச குணமடையும்.

மூச்சுத்திணறல் :

Image result for மூச்சுத்திணறல்

 

கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து கொடுக்க மூச்சுத்திணறல் நீங்கும். தொடர்ந்து வருகிற விக்கல் நிற்கும். சூதகக்கட்டு, சூதகச்சூலை போன்றவற்றுக்கு 1 கிராம் அல்லது 3 கிராம் அளவில் கொடுக்கலாம்.

எச்சரிக்கை :

நாம் தினமும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிற சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு) போன்றவற்றை தினசரி எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மருந்தாக பயன்படுகிற கருஞ்சீரகம், காட்டுச்சீரகம் போன்றவற்றை மருத்துவரின் ஆலோசனையின்றி நாமாகவே தினசரி எடுத்துக் கொள்வது நல்லதல்ல.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment