கரிசிலாங்கண்ணி கீரையின் மருத்துவ குணங்கள்!!

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் சாதரணமாக கிடைக்கும் கரிசிலாங்கண்ணி கீரையில் மருத்துவ குணங்கள் அதிக அளவில் உள்ளது.இதை சாப்பிடுவதன் முலம் உடலில் பல்வேறு நோய்கள் தீரும்.
தினமும் இதனை உணவில் சேர்ப்பதன் மூலம் கல்லிரல்,மண்ணீரல்,சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் சுரப்பிகளை தூண்டி விடுகிறது.உடலுக்கு தேவையான இரும்பு சத்தினை இது தருகின்றது.
நீரிழிவு நோயை கட்டுபடுத்தும். சளி, இருமலை குணமாக்கும். அஜீரணம், வயிற்றுவலி, குடல்புண், ரத்தசோகை, பித்தப்பை கற்கள் போன்றவற்றை போக்கும். உடலில் சேரும் அதிகமான கொழுப்பை கரைக்கும் சக்தியும் இருக்கிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமலுக்கு கரிசலாங்கண்ணி சாறு பத்து சொட்டும், தேன் 10 சொட்டும் கலந்து வெந்நீரில்  சேர்த்து கொடுக்க வேண்டும். கரிசலாங்கண்ணி இலையை தலைக்கு தேய்த்தால் தலைநோய், தூக்கமின்மை நீங்கும். கண்பார்வை அதிகரிக்கும். முடி உதிர்தல் நீங்கி முடி ஆரோக்கியமாக வளரும்.இந்த கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மென்று பல்துலக்கி வந்தால் பற்கள் நல்ல வெண்மை நிறமடையும். ஈறுகள்  பலப்படும். அதன் சாற்றை நாக்கு, உள்நாக்கில் மேலும், கீழும் விரல்களால் தேய்த்துவந்தால் மூக்கு, தொண்டை பகுதியில் உள்ள கபம் வெளியேறும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment