கணவன் , மனைவி ஒருநாளாவது குழந்தை இல்லாமல் சுற்றுலா செல்லுங்கள்..உங்களுக்கான அற்புத இடங்கள்…!!

தம்பதியர் திருமணம் முடிந்து ஹனிமூன் என்று கூறப்படும் தேனிலவிற்கு சென்று வந்த பின்னர், வேறு சுற்றுலா தளங்கள் குறித்த நினைவு ஏதும் இன்றி, தங்களது வேலை, தமது குழந்தைகள் என ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே வாழத் தொடங்கிவிடுவர்; பின்னர் குழந்தைகளை பெற்று எடுத்து, அவர்களை வளர்க்க, படிக்க வைக்க என தங்கள் நேரத்தை செலவிட்டு, அவர்களுக்காக உழைத்து, தேவைக்கேற்ற பணம் சம்பாதிக்க முயன்று, இடையே பற்பல செலவுகளை நாமே ஏற்படுத்திக்கொண்டு, நன்றாக சென்று கொண்டிருந்த நம் வாழ்க்கையை, நாமே பற்பல தேவைகளை ஏற்படுத்திக்கொண்டு, பாழாக்கிவிட்டோம்..!


குழந்தைகள் பிறந்தவுடனோ அல்லது அவர்கள் பிறகும் முன்னரோ மாதம் ஒரு முறை குடும்பத்துடன் எங்காவது சென்று வர வேண்டும்.




குழந்தைகளின் விடுமுறை நாட்களில், உங்களது விடுமுறை நாட்களில் என உலகின், நம் நாட்டின் முக்கிய இடங்களை, வரலாற்று கட்டடங்களை குடும்பத்துடன் சென்று கண்டு கழிக்க வேண்டியது அவசியம் குடும்பஸ்தர் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.


ஓடி ஓடி உழைத்து, சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமல் சாவது வீணாகும்..! எனவே, வாழ்வை வீணடிக்காமல் நீங்கள் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களை பற்றி இந்த பதிப்பில் பார்த்து படித்தறியுங்கள்..! மேலும் சிற்சில இடங்களுக்கு குழந்தையை வேறு யாரேனும் பாதுகாப்பில் விட்டுவிட்டு நீங்கள் தம்பதியராய் சென்று வருவதும் வேண்டும்..


குழந்தைகள் இல்லாமல் ஒரு சுற்றுலாவா என்று பல பெற்றோர்கள் நினைப்பார்கள்; ஆம். வருடத்தில் ஒருமுறையாவது நீங்கள் குழந்தைகள் இல்லாமல் ஒரு சுற்றுலா சென்று வரலாமே இதில் என்ன தவறு இருக்கிறது. குழந்தைகள் இல்லாமல் கணவன் மனைவி இருவர் மட்டுமே சுற்றுலா செல்ல வேண்டியதும் அவசியமே..
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment