சுமார் 4 மணி நேரமாக கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்து போராடிய இந்திய ராணுவம்…பொதுமக்கள் பாராட்டு

  • சிறப்பாக கொண்டாடப்பட்ட ராணுவத்தினத்தில் நெகிழ்ச்சியான சம்பவம்
  • 4 மணி நேரமாக சமீமா என்ற கர்ப்பிணி பெண்ணை தோளில் கடும்பனிக்கு இடையே சுமந்து சென்ற இந்திய ராணுவத்தினரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்.

இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது குடியரசு தலைவர், பிரதமர் மோடி ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் என அனைவரும் ராணுவ வீரர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு பெய்ந்து வருகிறது. கடும்பனிப்பொழுவுக்கு இடையே சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கர்ப்பினி பெண்ணை தங்களது தோளில் சுமந்து சென்று அவரை மருத்துவமனையில் சேர்த்து பிரவத்திற்கு தக்க சமயத்தில் ராணுவம் உதவியது.தற்போது அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. சமயத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு உதவி செய்த ராணுவத்தின் இச்செயலை பாராட்டும் விதமாக இந்த வீடியோவை  சமூகவலைத் தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாக்க பட்டு வருகிறது.

— தினச்சுவடு சார்பாக அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் வள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் —

author avatar
kavitha