கடல் நீச்சலில் சாதனை படைத்தார் மாற்றுத்திறனாளி மாணவர் தடை அதை உடை சபாஷ் !!

கடலூரில் மாற்றுத்திறன் படைத்த இளைஞர் ஒருவர் கடலில் 5 கி.மீ. வரை நீந்தி சாதனை படைத்துள்ளார்.

தேசிய மாணவர் படையை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் புதுவையில் இருந்து பெருங்கடல் சாகச பாய்மர படகு பயணத்தை தொடங்கினர். 450 கி.மீ. தொலைவுக்கான இந்தக் பயணத்தை ஜூலை 12ஆம் தேதி ஆரம்பித்தனர். இந்தப் பயணம் இன்று கடலூர் முதுநகரில் நிறைவு பெற்றது.

இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீ ராம் நிவாஸ் என்ற மாணவர் இன்று கடலூர் முதுநகரில் இருந்து கடலூர் வெள்ளிக் கடற்கரை வரை சுமார் 5 கி.மீ. நீந்தி சாதனை படைத்தார்.

பிறவியிலேயே பேச முடியாமலும் நடக்க முடியாமலும் போன இவருக்கு மனவளர்ச்சியும் பிறப்பிலேயே குன்றியிருந்தது. இருப்பினும் பெற்றோரின் ஈடுபாட்டுடன் 4 வயதிலிருந்து ஹைட்ரோதெரபி (Hydrotherapy) என்ற நீச்சல் பயிற்சி பெற்றார் ஸ்ரீராம்.

4 ஆண்டுகளுக்கு முன் கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் கடலில் இரண்டரை கிலோ மீட்டர் நீந்தி சாதனை படைத்தார். தனது இந்த சாதனையை தானே முறியடிக்கும் முயற்சியில் இன்று 5 கி.மீ. தொலைவைக் கடலில் நீந்திக்கடந்து அசத்தியுள்ளார்.

Dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment