கடலோர மாவட்டங்களில் வீடுகள் அமைக்க நிதியுதவி- மத்திய அரசிடம் கோரிக்கை

மாநிலத்தின் 13 கடலோர மாவட்டங்களில் 3.42 லட்சம் குடியிருப்புகளை கட்டுவதற்காக ரூ.26,575 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கடலோர மாவட்டங்களில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்கள் இழப்பு ஏற்படாமல் இருக்க,அங்கு வாழும் குடியிருப்புகளை நிர்மாணிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக குடிசை சுத்திகரிப்பு சபையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு படி 5.85 லட்ச குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்றும் இதில் 1.89 லட்ச குடியிருப்புகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது. இதற்காக ரூ.7,499 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான குடியிருப்புகள் திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment