கடற்படை தினம் : 6 நீர்மூழ்கிகப்பல்கள் கட்டும் பணி தொடக்கம்

கப்பற்படை தினத்தை முன்னிட்டு 6 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பல்கள் அணுஆயுத தாக்குதல் திறன் கொண்டவை ஆகும்.

இத்திட்டம் தொடர்பாக, நேற்று டெல்லியில் கப்பற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த பேட்டியில்:

‘அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தும் திறனுள்ள 6 நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்கும் கனவு திட்டம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கப்பற்படையின் பலம் அதிகரிக்கும். எந்த தாக்குதலையும் சமாளிக்கும் வல்லமை கப்பற்படைக்கு கிடைக்கும்’. என சுனில் லன்பா கூறினார்.

இந்திய – பசிபிக் கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் தொடர்கிறது. எனவே, கடல் பகுதியில் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் இந்த நீர்மூழ்கிக்கப்பல்கள் தயாரிக்கப்படுகின்றன.- பிடிஐ

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment