ஓரிரு மாதங்களில் வெளிநாட்டு இறக்குமதி மணல் விநியோகம் செய்யப்படும் !முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ,வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்பட்டு ஓரிரு மாதங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

காவிரி டெல்டா பகுதிகளில் மணல் திருட்டுத்தனமாக அள்ளப்படுவதாகவும் அதனால் நிலத்தின் தன்மை மாறிவருவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர், மணல்திருட்டை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். முறைகேடாக மணல் அள்ளியதாக திமுக ஆட்சியில் 18 ஆயிரம் லாரிகள் கைப்பற்றப்பட்டு, 50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், அதிமுக ஆட்சியில் 48 ஆயிரம் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு 160 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சிசிடிவி கேமிரா, ஆன்லைன் பதிவு, லாரியில் ஜி.பி.எஸ் பொறுத்துவது உள்ளிட்டவை மூலம் மணல் அள்ளுவதில் முறைகேடுகள் களையப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment