ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

ஓய்வூதியம், அகவிலைப்படி நிலுவைகளை வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற போக்கு வரத்து தொழிலாளர்கள் நேற்று 2-வது நாளாக சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விழுப்புரம் கோட்டத்துக்கு உட்பட்ட விழுப் புரம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மண்டலங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது:

போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி 2017-க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு சம்பளம், சமூக பாதுகாப்பு நிதி போன்ற பணப்பலன்களை வழங்க வேண்டும். ஓய்வூதிய நிலுவை, குடும்ப ஓய்வூதிய நிலுவை, அகவிலைப்படி நிலுவை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 நாள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரு கிறோம். முதல்நாளில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத் தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் கள் கலந்துகொண்டனர். இன்று நடக்கும் இரண்டாம் நாளில் விழுப்புரம் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்றுள்ளனர். 15-ம் தேதி வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு கே.கர்சன் கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment