ஓடும் ரயிலில் பாலியல் தாக்குதலில் இருந்து பெண்ணைக் காப்பாற்றிய பாதுகாப்புப் படை வீரருக்கு பரிசு தொகை..!

ஓடும் ரயிலில் பாலியல் தாக்குதலில் இருந்து பெண்ணைக் காப்பாற்றியதற்காக ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சிவாஜிக்கு அவரது துணிச்சலைப் பாராட்டி இந்திய ரயில்வே துறை அவருக்கு விருது அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுடெல்லியிலுள்ள இந்திய ரயில்வேத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓடும் ரயிலில் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக இருந்த பெண்ணை மீட்டுள்ளார் ரயில் பாதுகாப்புப் படைக் காவலர் சிவாஜி. அவரது தைரியம், திறமையை வெளிப்படுத்தியதற்காகவோ அல்லது துணிச்சல் அல்லது கடமையின் மீதுள்ள பற்றை வெளிப்படுத்தியமைக்காகவோ இந்திய ரயில்வே அவருக்கு ரூபாய் 1 லட்சம் அறிவிக்கிறது.

கடந்த ஏப்ரல் 23 அன்று, இரவு வேளச்சேரி நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயில் 11,45 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து திரும்பும்போது ஒரு பெண் கூச்சலிடும் சத்தம் கேட்டது. அச்சமயம் பணியில் இருந்த ரயில் சுறுசுறுப்பான காவலர் சிவாஜி சத்தம் வரும் பெட்டிக்கு அருகில்

உள்ள பெட்டியில் வந்துகொண்டிருந்தார். பெண்ணின் சத்தம் பேட்டு உடனடியாக அப்பெண்ணை எப்படி மீட்பது என்பது குறித்து கவலையடைந்தார்.

அவர்கள் வந்துகொண்டிருந்த ரயில் அடுத்த நிலையமான பார்க் டவுன் நிலையத்தில் வந்து நின்றது. உடனே இறங்கி ஓடி அப்பெட்டிக்குள் நுழைந்தார். ஒரு பெண் பயணியை ஒரு நபர் பாலியல் ரீதியாக தாக்குவதற்கு முயல்வதை கவனித்தார், உடனே பாலியல் தாக்குதலுக்கு முயலும் நபரை அடித்துத் தள்ளி பெண்ணைக் காப்பாற்றினார். பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவரையும் அவர் கைது செய்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் உடனடியாக சென்னை எழும்பூரிலுள்ள அரசு ரயில்வே காவல் படைப்பிரிவிடம் சிவாஜி ஒப்படைத்தார். காவலர் சிவாஜி அளித்த புகாரின்பேரில் அவர் மீது குற்றவழக்கு (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. மீட்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ரயில்வே அமைச்சரின் பதக்கம்

இவ்வழக்கை நேரில் விசாரணை செய்த ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரயில்வே பொன் மாணிக்கவேல் காவலரின் வீர தீர செயலுக்காக ரூ.5 ஆயிரம் பரிசளித்து பாராட்டுத் தெரிவித்தார். இந்நிலையில் காவலர் சிவாஜியின் துணிச்சல் மிகுந்த கடமை உணர்ச்சியைப் பாராட்டி மத்திய ரயில்வே அமைச்சரின் பதக்கமும் ரூ.1 லட்சம் ரொக்கமும் அளிப்பதாக இந்திய ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment