ஒரு நாளுக்கு 2 மணி நேரமே ஓய்வு…இரவு பகல் பாராமல் நிவாரணப்பணி…அதிகாரிகள் தீவிரம்…!!

கஜா புயலின் கோர தாண்டவத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கஜா புயலில் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. புயல் தாக்கிய பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் அழிந்துள்ளது. பல லட்சம் ரூபாய் நஷ்டத்தால் விவசாயிகள் வேதனையடுத்துள்ளனர். விவசாயிகள் பெரும் துயரத்தை எதிர்க்கொண்டு உள்ளார்கள். புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
நாகை மாவட்டம்  வேதாரண்யம் பகுதியில் பழமை வாய்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வேராடு சாய்ந்துள்ளது. 20 ஆயிரம் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதில் சில மின்கம்பங்கள் காற்றின் வேகத்தில் தூள், தூளானது. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. சுமார் 15 ஆயிரம் வீடுகளில் மேற்கூரைகளே கிடையாது.
சாலையோரம் இருந்த பெரிய மரங்கள் எல்லாம் வரிசையாக முறிந்து விழுந்ததால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடியக்கரை வனப்பகுதயில் கஜா புயலின் தாக்கம் கடுமையாக இருந்ததையடுத்து, சாலையெங்கும் மரங்கள் விழுந்து கிடக்கின்றன. இதனையடுத்து அப்பகுதியில் 25 வீரர்களை கொண்ட நான்கு பேரிடர் மீட்பு குழு, நிவாரணப்பணிகளை செய்து வருகிறது. நாள் ஒன்று இரண்டு மணி நேரமே ஓய்வெடுக்கும் அவர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் பணிகளை வேகமாக செய்யமுடிவதாகவும் தெரிவித்துள்ளனர். வேரோடு விழுந்துள்ள மரங்களை அகற்றுவது சவாலான வேலையாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
dinasuvadu.com
author avatar
Dinasuvadu desk

Leave a Comment