ஏப்ரலில் மிரட்ட வருகிறது காஞ்சனா 3! ராகவா லாரன்ஸின் அதிரடி அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கி பெரும் வெற்றிப்படம் காஞ்சனா. இது முன்னர் வெளிவந்த முனி படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்திருந்தது. இதில் பேய் படங்களை திகிலோடும் அதற்கு இணையாக லாரன்ஸ் கமெடியான நடிப்பின் மூலமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

பிறகு இப்படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 2 எடுத்திருந்தார். இதுவும் அதே போல பெரிய ஹிட் படமாக அமைந்தது.  100 கோடி வசதலையும் ஈட்டியது. இதனை தொடர்ந்து தற்போது காஞ்சனா 3 முந்தைய பாகங்களை விட பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

இதன் ஷூட்டிங் வேலைகள் முழுவதும் முடிவடைந்து விட்டது. ஒரேஒரு பாடல் காட்சி மற்றும் மீதம் இருக்கிறதாம். அதனை முடித்ததும் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு படத்தினை ஏப்ரல் 18 இல் கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Source: tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment