எல்லை தாக்குதல்களை விட நாட்டில் குண்டும் குழியுமான சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம்..உச்சநீதிமன்றம் கண்டனம்..!!

நாட்டில் எல்லை தாக்குதல்களை விட குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் ஏற்பட கூடிய உயிரிழப்புகளே அதிகம் என உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது.
நாட்டில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சாலை பராமரிப்பில் போதிய அக்கறை காட்டுவதில்லை என்றும் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளினால் ஏற்படும் விபத்து தொடர்பான பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையிலான சாலை பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில்  நாட்டில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளால் ஏற்பட்ட விபத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 14,926 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.மேலும் சாலை பராமரிப்புகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.மேலும் இது குறித்த விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் ஹேமந்த் குப்தா அடங்கிய அமர்வானது கடந்த  2013 முதல் 2017 வரையில் மோசமான சாலைகள் காரணமாக ஏற்பட்ட விபத்துக்கள் மற்றும் சாலைகளை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தன போக்கால் சரியாக கவனம் செலுத்தாத நிலை என்பதை காட்டுவதாக குறிப்பிட்டது.இந்திய எல்லையில் நடக்கும் பயங்கரவாத தாக்குதலால் ஏற்படும் உயிரிழப்பை விட சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு அதிகம் என்று நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.மேலு தெரிவித்த நீதிமன்றம் சாலைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டிய அரசுகள் தங்கள் பணிகளை செய்யாத காரணத்தினால் உயிரிழப்புக்கள் நேரிடுவதாக கூறினர்.இனி இது போன்ற அலட்சிய போக்குகளை ஏற்க முடியாது என்று காட்டமாக தெரிவித்து இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மிக மோசமான சாலைகளினால் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

author avatar
kavitha

Leave a Comment