எல்லா பகுதிகளிலும் விற்று தீர்ந்த விஸ்வாசம்..!! தல பொங்கலை கொண்டாடும் ரசிகர்ள்..!!

நடிகர் அஜித் நடித்து இயக்குநர் சிவா இயக்கத்தில் பொங்கலுக்கு வரும் படம் விஸ்வாசம் மற்றும் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினியின் பேட்ட இந்த இரண்டும் படங்களுமே ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த இரண்டு படங்களுக்குமே ஒரே அளவு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இந்த நிலையில் விஸ்வாசம்  தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விநியோக உரிமையாளர்களிடம் விற்கப்பட்டுவிட்டது.ஆனால் தற்போது படம் பகுதி வாரியாக விஸ்வாசம் உரிமையை வாங்கியுள்ளவர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.  அதில் சென்னை பகுதி உரிமையை SPI சினிமாஸ் பெற்றுள்ளது மற்றும் திருச்சி பகுதிகளில் சத்யஜோதி நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் பொங்கலை தல பொங்கலாக கொண்டாட ஆவலாக உள்ளனர்.

author avatar
kavitha

Leave a Comment