எம்எஸ் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூரிய பிரபலங்கள்..!

எம்எஸ் தோனி என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்ற மகேந்திரசிங் தோனி 1981ஆம் ஆண்டு ஜூலை 7இல் பிறந்தார். இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னால் இந்திய அணிக்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைவராக இருப்பவரும் ஆவார். துவக்கத்தில் மிகுந்த ஆரவாரமான அதிரடியான பேட்ஸ்மேன் ஆகா  அறியப்பட்டிருந்த தோனி இந்திய ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்கு தலைமையேற்றதிலிருந்து மென்மையான தலைவர்களுள் ஒருவராக குறிப்பிடப்படுகிறார்.

Image result for dhoniஇவரது தலைமையின்கீழ் இந்தியா 2007 ஐசிசி டி20 உலகக்கோப்பை 2007-08ஆம் ஆண்டு சிபி தொடர் மற்றும் 2008இல் அவர்கள் 2க்கு 0 என்ற வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பார்டர்-கவாஸ்கர் டிராபி ஆகியவற்றை வென்றது. ஸ்ரீலங்காவிலும் நியூசிலாந்திலும் அவர்களது முதலாவது இரு அணி ஒருநாள் சர்வதேச தொடருக்கும் இவர் தலைமையேற்றார். 2008 மற்றும் 2009ஆம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் சர்வதேச போட்டிகள் விளையாட்டு வீரர் விருது (இந்த விருதைப் பெற்ற முதலாவது இந்திய விளையாட்டு வீரர்), ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மற்றும் 2009ஆம் ஆண்டில் குடிமகனுக்கான மிக உயரிய நான்காவது கவுரமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் தோனி பெற்றிருக்கிறார். 2009ஆம் ஆண்டு நவம்பர்வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் தோனி அதிக மதிப்பெண் பெற்ற மட்டையாளராக இருக்கிறார். 2009ஆம் ஆண்டில் விஸ்டனின் முதலாவது கனவு டெஸ்ட் XI அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருக்கிறார். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் துடுப்பாட்ட வீரர்களில் மகேந்திர சிங் தோனி முதலாவதாக இருக்கிறார். தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் உலகக்கோப்பையை வென்றது.

Image result for dhoniஇன்று பிறந்த நாள் காணும் நம்ம தல டோனிக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் , டோனியின் நெருங்கிய நண்பர் ரெய்னா, ஆகியோர் தனது அன்பை பொலிந்து வாழ்த்து கூறினார்.

மேலும் இசையமைப்பாளர் அனிருத் , நடிகர் மகேஷ் பாபு, நடிகை பிரியா வாரியர் , கிரிக்கெட் வர்ணனையாளர் சுந்தர் பிள்ளை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

https://twitter.com/priyapvarrier/status/1015293552761364481

author avatar
Dinasuvadu desk

Leave a Comment