எந்த அடிப்படையில் தென்னை மரத்திற்கு ரூ.1000 அறிவித்தீர்கள்…? சீறும் சீமான்..!!

கஜா கொடூரன் தமிழகத்தை பொறுத்த வரை 4 மாவட்டங்களை சுக்குநூறாக உடைத்து சென்றவன் என்று தமிழக மக்களால் வசைப்படப்படும் இந்த கஜா புயலால் ஏற்பட்ட சேதம் வார்த்தையால்,வரிகளால் விவரிக்க முடியாத வண்ணம் பலத்த சேதத்தையும்,மக்களையும் துயரில் ஆழ்த்தி சென்றுள்ளது இந்த புயல்.

Related image

இதில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கோடிஸ்வர்களோ,அரசாங்க அதிகாரிகளோ அல்ல விவசாயிகள் பூமியையும் நிலத்தையும் நம்பி வாழ்க்கை நடத்தும் விவசாயிகள் தன் பிள்ளையாக வளர்த்த தென்னையை தென்னம்பிள்ளை என்று பிள்ளைப்போல் வளர்த்த மரங்கள் எல்லாம் கண் முன்னே சாய்ந்து சரிந்து கிடப்பதை பார்க்கமுடியவில்லை என்று கதறும் மக்களின் கூக்குரல் இதனால் தங்கள் எங்கள் வாழ்வாதாரமே ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Related image

ஆம் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 20 லட்சம் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளது என்கின்றனர். இந்த தென்னையை வளர்க்க மற்றும் காய்காக்க 10 வருடங்கள் ஆகுமாம் டெல்டா பகுதிகளில் இதனாலே அங்குள்ள மக்கள் இப்பொழுது தென்னையை வளர்த்தால் பின்னாளில் தென்னை நம்மை வளர்க்கும் என்று தென்னை மட்டுமே நம்பி வாழும் மக்கள் ஏராளம்.சில தினங்களுக்கு முன் கண் முன்னே சாய்ந்த தென்னை மரங்களை கண்ட விவசாயி ஒருவர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

Related image

தங்கள் வருமானம் முழுவதும் தென்னைக்கு செலவளித்து பார்த்து பார்த்து வளர்த்து பலன் கொடுக்கும் தருவாயில் எப்படி பாழாய் போனதை எண்ணி கண்ணீர் வடிக்கின்றனர் அப்பகுதி மக்கள் ஏன் தற்போது கூட பாதித்த பகுதிகளுக்கு  நிவாரண பொருட்களை வண்டியில் அனுப்பி வைத்தவர்களுக்கு வண்டி முழுவதும் தென்னங்காய்களை திருப்பி அளித்து தங்கள் நன்றியை தெரிவித்தது துயரிலும் என்னவொரு எண்ணம் என்று அனைவரும் மெய்சிலிர்க்க வைத்தனர்.

Image result for சீமான்

இந்நிலையில் தமிழக அரசு அண்மையில் சேதமடைந்த தென்னை மரம் ஒன்றிக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமாம் கேள்வி எழுப்பியுள்ளார்.எதனடிப்படையில் ஒரு தென்னை மரத்திற்கு 1000 ரூபாய் நிவாரணங்களை அரசு அறிவித்துள்ளது? விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தவே பல ஆயிரம் செலவாகும்போது எப்படி அவர்களால் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டுவரமுடியும் என்று அரசை விமர்சித்துள்ளார்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment