ஈரானில் நிலநடுக்கம். 5.2 ரிக்டராக ஆக பதிவானது

ஈரான் நாட்டில் தலைநகர் அருகில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு மீட்பு குழுவினர் விரைந்துசென்று பாதிப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த நிலநடுக்கம் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் தென்மேற்கே மெஷ்கிண்டாஷ்ட் நகரில் ஏற்பட்டது.

இது குறித்து, பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்நிலநடுக்கம் தெஹ்ரான் மட்டுமில்லாமல், ஈரானின் வடக்கே பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.

source: dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment