” இவர் கோமாளி ” ” இவர் பிஜேபியின் கைக்கூலி ” பதிலுக்கு பதில் விமர்சனம்

ராகுல்காந்தி கோமாளி; தெலுங்கானா முதல்வர் :

சந்திரசேகர ராவ் பாஜக-வின் கைக்கூலி என காங்கிரஸ் விமர்சனம்

 

ஐதராபாத்:

ராகுல்காந்தியை கோமாளி என்று விமர்சித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பு பற்றி செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். ராகுல்காந்தி கோமாளி என்பது நாட்டுக்கே தெரியும் என்று அவர் சாடினார்.
Image result for ராகுல்காந்தி
இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான் ரன்தீப் சுர்ஜிவாலா சந்திரசேகர ராவ் பாரதிய ஜனதாவின் முகமூடி என்று குற்றம் சாட்டினார். மேலும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆட்டுவிக்கும் பொம்மை சந்திரசேகர ராவ் என்று அவர் குற்றம் சாட்டினார்.
Image result for சந்திரசேகர ராவு
மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியதை அடுத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பாரதிய ஜனதாவுடன் மறைமுக உறவு வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக பிரதமர் மோடியும் தெலுங்கானா மாநிலத்தை பாராட்டி கருத்து தெரிவித்தார். இதற்கு முன் மாநில கட்சிகளை கொண்ட பெடரல் ட்ரெண்ட் அமைத்து தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை உருவாக்க சந்திரசேகர ராவ் முயன்றது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment