இனி கஞ்சாவை பயிரிடலாம்! தடையை நீக்கிய அரசு!

கனடா அரசு  கஞ்சாவை பயிரிட்டு விற்பனை செய்யவும், வாங்கி பயன்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பான சட்டமசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

பெரும்பாலான நாடுகளில்  போதை பொருட்களில் ஒன்றான கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை பயிரிடவும், பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளில் இந்த தடை அமலில் உள்ளது. ஆனால் சட்டவிரோதமாக கஞ்சா பயிரிடப்பட்டு கடத்தப்பட்டு வருகிறது.

Image result for canada

கனடாவில் வெயினுக்கு அடுத்தபடியாக அதிகஅளவு கஞ்சா பயன்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 32 ஆயிரம் ரூபாய் கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்டு கனடாவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கஞ்சாவுக்கு சட்டபூர்வ அனுமதி கோரி கனடாவில் பிரமாண்ட பேரணிகள் நடைபெற்றன. ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த போராட்டத்தால் கனடா அதிர்ந்தது.

 

கனடாவில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்த அனுமதி உள்ளது.எனினும் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. சட்டபூர்வ அங்கீகாரம் கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடந்ததன.

இதைத் தொடர்ந்து தற்போது கஞ்சாவை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை கனடாவில் எழுந்தது. இதையடுத்து கஞ்சா செடியை வளர்க்கவும், முறையான அனுமதியுடன் விற்பனை செய்யவும், கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தவும் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கனடா நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் நேற்று சில திருத்தங்களுடன் மீண்டும் செனட் சபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. 52 எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 29 பேர் எதிர்த்து வாக்களித்தனர். இதனால் மசோதா நிறைவேறியது.

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் ‘‘கஞ்சாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை சில கும்பல் சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்பனை செய்கிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் சம்பாதிக்கிறது. கஞ்சாவை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டதன் மூலம் தற்போது கள்ளச்சந்தை மாபியாக்களின் விற்பனை முடிவுக்கு வரும்’’ எனக் கூறினார்.

உருகுவே நாடு 2013-ம் ஆண்டு கஞ்சா விற்பனைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் சில மகாணங்கள் கஞ்சாவை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த அனுமதி வழங்கின.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment