இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 18 மாதங்களாக தொடர்ந்து சரிவு!

இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக, 18 மாதங்களாக தொடர்ந்து சரிவை எதிர் கொண்டிருக்கிறது.

பொருளாதார வல்லுநர்கள்  பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ள நிலையில், ரூபாய் மதிப்பிற்கு ஏற்பட்டுள்ள சரிவு கவலையளிப்பதாக கூறியிருக்கின்றனர்.புதன்கிழமை நிலவரப்படி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 ரூபாய் 68 காசுகளாக சரிந்தது. 18 மாதங்களாக தொடர்ந்து சரிவின் எதிரொலியாக முன்னெப்போதும் இல்லாத வகையில், ரூபாயின் மதிப்பு சரிந்திருக்கிறது.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் தேதி இருந்ததை காட்டிலும், சுழியம் புள்ளி 62 விழுக்காடு அளவிற்கு ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. கச்சா எண்ணெய்யின் விலை முன்பிருந்ததை காட்டிலும் சற்று உயர்ந்துள்ள நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. இந்த போக்கு தொடருமானால், இந்தியாவின் டாலர் கையிருப்பு கேள்விகுறியாகும் என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Comment