இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் மீது வழக்குப்பதிவு?

இந்திய அணியின் இளம் ஆல்-ரவுண்டர் மீது வழக்குப்பதிவு?

நீதிமன்றம்  இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா  மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

Related image

ஹர்திக் பாண்டியா இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஆவர். இவர் கடந்தாண்டு டிசம்பர் 26ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். இடஒதுக்கீடு என்ற நோயை இந்தியாவில் பரப்பியவர் அம்பேத்கர் என கூறியிருந்தார். இந்தக் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்தப் பதிவை அவர் நீக்கிவிட்டார்.

இதனையடுத்து, டி.ஆர்.மேவால் என்பவர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், ஹர்திக் பாண்ட்யாவின் கருத்து அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையிலும் அரசியல் அமைப்பை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த ஜோத்பூர் நீதிமன்றம், ஹர்திக் பாண்ட்யா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் ஹர்திக் பாண்ட்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி கிரிக்கெட் வீரர்கள் சர்ச்சையில் சிக்குவது பிசிசிஐக்கு பெரும் தலைவலியாக உள்ளது. முகமது ஷமி விவகாரம் பூதாகரமாகி உள்ள நிலையில் தற்போது பாண்ட்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *