இந்தியாவை பிளவுபடுத்தும் அரசியல் இன்று நடக்கிறது… இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பளீர் தாக்கு…

ஏகம் சாட் ஒற்றுமை இசை நிகழ்ச்சி என்ற  50 வது சிம்பொனி இசை நிகழ்ச்சியில் ஆஸ்கர் புகழ் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அமேயா டப்ளி ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் பிரிவினை அரசியல் குறித்து கேள்வி ஒரு கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இந்தியாவில் இன்றைக்கு மக்கள் சரியான திசையில் சென்று கொண்டு இருக்கிறார்கள். ‘ஒற்றுமை’ என்று நீங்கள் கூறும்போது, ‘நீங்கள் என்ன ஒற்றுமையைப் பற்றி பேசுகிறீர்கள்?’ பிளவுபடுத்தும் அரசியல் நிறைய நடப்பதால், பிளவுபடுத்தும் மனநிலையே இங்கு நீடிக்கிறது. ஆனாலும் இறுதியில் மனிதர்களாகிய நாம் இங்கு  ஒற்றுமைக்காக கடுமையாக உழைக்கிறோம், இந்தியாவில் ஒற்றுமையின் காரணமாக  அமைதியைக் காண்கிறோம், நாம் அனைவரும் நம்பிக்கையையும், அறிவையும் பகிர்வதில்தான் அமைதி கொள்கிறோம். பள்ளிக் குழந்தைகளை உதாரணமாக  எடுத்துக்கொள்ளலாம். சொன்ன விஷயத்தை திரும்பவும் அவர்களிடத்தில் சொன்னால், ஏற்கனவே சொன்னதை நீங்கள் சொல்லவேண்டாம் என்று நம்மிடம் பதில் அளிப்பார்கள். உண்மையை அவரவர்களே அறிந்துகொள்ளவேண்டும். அதுதான் சிறந்த விஷயமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

 

author avatar
Kaliraj