ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.

பழங்களில் மிகவும் சிறந்த சுவையான பழம் ஆரஞ்சுப் பழம் என்று கூறலாம்,சிரியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் .இந்த நிலையில் இந்த பழத்தை சாப்பிட்டால் என்ன நன்மை என்று பார்க்கலாம் .

நன்மைகள்:

ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து ஜூஸ் போட்டு குடித்து வந்தால் சிறுநீரக பிரச்சனை கல்லடைப்பு போன்ற நோய் சரியாகும் ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது அதில் அதிக அளவு சர்க்கரை போட வேண்டாம் ஏனென்றால் அது உங்கள் பற்களை பூச்சடைய செய்யும், மேலும் இந்த ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அவை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் செய்கிறது.

ஆரஞ்சில் பொட்டாசியம் கனிமச்சத்து நிறைந்துள்ளது, இது இதயத்தை சீராக நல்ல வழி மேலும் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்தாலும் இதய பிரச்சனைகள் ஏற்படும் எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட வேண்டும் , வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு பழம் சாப்பிடுவதால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் எந்த நோயும் வராமல் தடுக்கும் மேலும் கால்சியம் சத்தும் அதிகம் நிறைந்து உள்ளது ஆகவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் வலுவான பற்களைப் பெறலாம்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.