ஆய்வாளர்கள் அதிர்ச்சி..! கடல் பகுதியில் பிளாஸ்டிக் ..!

உலகில் மிக ஆழமான கடல் பகுதி என கருதப்படுவது மரியானா டிரெஞ்ச் பகுதி. அப்பகுதியில் பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆய்வாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பசிபிக் பெருங்கடலில் உள்ள உலகின் ஆழமான பகுதியான  மரியானா டிரெஞ்ச் பகுதியில் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி ஈடுப்பட்டபோது இது தெரியவந்ததுள்ளது. கடற்கரையில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் அவர்கள் நடத்திய ஆய்வின் போது பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

கடலுக்குள் 36 ஆயிரம் அடி ஆழத்தில் ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கிடந்தது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த பிளாஸ்டிக் பைகளை அந்த ஆழமான கடல் பகுதியில் தங்கள் குடியிருப்புகளாக ஆக்டோபஸ் உள்ளிட்ட உயிரினங்கள் பயன்படுத்தி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
Dinasuvadu desk

Leave a Comment