ஆப்பிள் தோலில் எவ்வளவு சத்து இருக்குதுனு தெரியுமா …? ஓஒ அப்படியா…!!!

ஆப்பிள் பழம் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும். ஆப்பிள் பழத்தில் மட்டுமல்ல, தோலிலும் அதிக சத்து உள்ளது. ஆப்பிளை சிலர் தோலை சீவிவிட்டு தான் சாப்பிடுவார்கள். ஆனால் ஆப்பிளைவிட அதன் தோளில்தான் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆக்சிஜனேற்றிகள் ஆப்பிள்களில் அதிகம் உள்ளது. இது நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. உடற்பயிற்சி  செய்து முடிந்ததும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் பயிற்சியின் பொது இழந்த உடல்வலிமையை பெற முடியும்.

ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண்புரை ஏற்படும் அபாயத்தை குறைத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஆப்பிள்களில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மற்றும் இரும்பு ஆகியவை நிறைந்துள்ளன. அத்துணை எலும்புகளை வலுவூட்டும். வலுவாக மாறும்.
ஆப்பிளின் தொழில் நார்சத்து அதிகம் இருப்பதால் அவை சிறுநீரக கற்கள் உருவத்தையும், உடலிலகொலஸ்டரால் அதிகமபவத்தையும் தடுத்து உடல்பருமனை அதிகரிக்காமல் தடுக்கிறது.

இது கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறைக்க உதவுகிறது. அதே போல் ஆப்பிளின் தொழில் இரும்புசத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது கர்ப்ப காலத்தில் ரத்த சோகைக்கான ஆபத்தை குறைக்க உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
ஆப்பிள் தொழில் பெக்டின் என்ற வெடிபொருள் கணிசமாக இருப்பதால், தோளோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது.
 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment