அருந்ததியர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்..!

தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் முனியராசு தலைமை தாங்கினார்.

துணை தலைவர் செபஸ்தியான், துணை செயலாளர் மூக்கையா, பொருளாளர் மோகன்ராம், அமைப்பு செயலாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அழகர் வரவேற்று பேசினார். போராட்டத்தை மாநில பொது செயலாளர் வரதராஜ் தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு அருந்ததியர் சங்க தலைவர் நாகலிங்கம் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தை எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழகத்தில் அருந்ததியருக்கு 6 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும், ஆதிதிராவிட நல மாணவ–மாணவிகள் விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும்,

ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாதம் ரூ.15,000–ம் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் மலைராஜ் நன்றி கூறினார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment