அருண் ஜெட்லி அதிரடி : மத்திய அமைச்சரவையின் புதிய சட்டம் !

மத்திய அமைச்சரவையின் புதிய சட்டம் : பொருளாதாரக் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய ஒப்புதல்

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் தொடங்கிய மத்திய அமைச்சரவை கூடத்தில், வங்கி மோசடி, வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருத்தல் போன்ற பொருளாதார குற்றங்கள் செய்து வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் வகையில் புதிய மசோதாவுக்கு  இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மசோதாவுக்கு, “தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதா” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.100 கோடிக்கு அதிகமாக வங்கி மோசடி, கடன் மோசடி செய்து தப்பித்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவற்றை ஏலமிட்டு கடனை செலுத்த முடியும்.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்த மசோதா குறித்து  டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

ரூ.100 கோடிக்கு அதிகமாக மோசடி செய்து, வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும நோக்கில் தலைமறைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சொத்து பறிமுதல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த மசோதா வரும் 5-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத் கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படும். பொருளாதார குற்றம் செய்து தப்பித்தவர்கள், நீதிமன்ற கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டவர்கள், விசாரணையை எதிர்கொள்ள பயந்து வெளிநாடுகளில் இருப்பவர்கள், கிரிமினல் விசாரணைய எதிர்கொள்ள முடியாதவர்கள் ஆகியோருக்கு எதிராக இந்த சட்டம் பாயும்.

இதற்கு முன் கொண்டுவரப்பட்ட சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தைக்காட்டிலும் இது வித்தியாசமானதாகும். இந்த சட்டத்தில் பொருளாதார குற்றம் செய்து தலைமறைவாகஇருந்தால், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியும்.

பொருளாதார குற்றம் செய்து தப்பித்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் கொண்டுவரப்படும் என்று பட்ஜெட் தாக்கலின்போது கூறியிருந்தோம் அதை இப்போது செயல்படுத்தியுள்ளோம்.

இந்த சட்டம் ஏற்கனவே குற்றம் புரிந்தவர்கள் மீதும், பயன்படுத்தப்படும், வழக்கு நடந்துபவர்கள் மீதும் பாயும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment