அரசியலில் ஜொலிக்க போகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்….!!

1990-களில் ரசினிகாந்த் நடித்த சில திரைப்படங்களின் வசனங்களிலும் பாடல்களிலும் அரசியல் நெடி சற்று இருந்தது. 1996 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அப்போது ஆளும் கட்சியாக இருந்த அதிமுக கட்சிக்கு எதிராக இவர் தொலைக்காட்சிகளில் பத்திரிகைகளிலும் கருத்து கூறியது அக்கட்சி தோற்க காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.2004 இந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு தான் வாக்களித்ததாக வெளிப்படையாக அறிவித்தார். இவர் நேரடியாக அரசியலில் ஈடுபடப் போவதாக சில வருடங்களாக வதந்திகள் சுற்றினாலும், ரஜினிகாந்த் அரசியலில் ஒட்டாமலே ஒதுங்கி இருந்து வந்தார்
ரஜினிகாந்த் 2008 நவம்பர் 3 அன்று ரசிகர்களை சந்தித்து பேசினார். ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரின் அரசியல் வருகை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது,எந்திரன் படத்திற்கு பிறகு முடிவு அறிவிப்பதாகக் கூறினார். லிங்கா பட இசை வெளியீட்டின் போது “அரசியலுக்கு வர வேண்டும் என இருந்தால் வருவேன்” எனக் கூறினார். 1996 தேர்தலில் ரஜினிகாந்தின் தாக்கத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள இவரது பல ரசிகர்கள் அரசியலில் நுழைவதற்கு, குறிப்பாக மாநில முதல்வர் பதவிக்குப் போட்டியிட அழைப்பு விடுத்தனர். ரஜினிகாந்த் டிசம்பர் 31, 2017 அன்று தன் அரசியல் வருகையை அறிவித்தார். தான் ஆரம்பிக்கப்போகும் அரசியல் கட்சி 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவித்தார். மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் தன் கட்சி ராஜினாமா செய்யும் என்றும் கூறினார்.
DINASUVADU.COM
 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment