அரசாங்க நிலத்தில் மருத்துவ கழிவு – சட்டவிரோத செயல்..!

செங்கல்பட்டில் உள்ள அரசாங்க நிலத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடர்ந்த காடுகளை கொண்ட இந்த இடம் பொதுமக்களின் பார்வையில்  படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. ஏனெனில் இந்த இடத்திற்கு அருகில் உள்ள மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எல்.டி.ஆர்.ஐ) மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு பதிலளித்த கூடுதல் இயக்குனர் டாக்டர் எஸ். எவரவாசன், இதை தாங்கள் செய்ய வாய்ப்புகள் இல்லை என்றும் அரசாங்க விதிமுறைகள் படியே தாங்கள் கழிவுகளை கொட்டுவதாகவும் கூறியுள்ளார். இதனை சீர் செய்ய தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டு சுற்றுச்சூழல் பொறியாளர் ஒரு தனி படை உருவாக்குவதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிட வேண்டியதாகும்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment