கழிப்பறையில் மகாகவி பாரதியின் புகைப்படம்..கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள் கண்டனம்

  • கழிவறையில் மகாகவி பாரதியின் புகைப்படம் இடபெற்றுள்ளதற்கு பொதுமக்கள் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம்
  • திருச்சி புத்தூரில் அமைச்சர் திறந்து வைத்த கழிப்பறை கட்டிடத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்படும் வைக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ளது மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை இதன் அருகே வயலூர் சாலைப் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நாள்தோறும் இங்கு சோமரசன்பேட்டை மற்றும் அல்லித்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல ஏராளமான பயணிகள் பேருந்துக்காகக் காத்திருகின்ற நிலை உள்ளது.இதனால் பயணிகளின் சிரமத்தைப் போக்க வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை பல்வேறு அமைப்பினரும் எடுத்து வருகின்ற நிலையில், அந்தப் பகுதியில் கழிப்பறை ஒன்றை கட்டித்தர  வேண்டும் என்று நெடுநாள்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.கோரிக்கையை ஏற்ற அரசும் அதற்கான பணிகளில் இறங்கி கட்டுமான பணிகள் முடித்தது.பயன்பாட்டிற்கு  வருவதற்காக அன்மையில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தனர்.

திருச்சி ஸ்மார்ட் கழிப்பறை திறப்புவிழா

கோரிக்கையை ஏற்று மக்களின் சிரமத்தை போக்கும் விதமாக கட்டிடத்தை கட்டி முடித்து   திறந்து வைத்ததற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு கலந்த நன்றியை தெரிவித்தனர்.ஆனால் கட்டப்பட்ட கழிப்பறையின் பெயர் தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது மேலும் கழிப்பறையின் ஆண்களுக்கான வழியைச் சுட்டிக்காட்ட மகாகவி என்று போற்றப்படும் பாரதியாரின் படம் வைக்கப்பட்டுள்ளது.இதனால் அரசுக்கு பொதுமக்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தோடு கட்டிடத்திற்கு தமிழில் பெயர் மற்றும் பாரதியின் புகைப்படத்தை நீக்க வேண்டும் என்று மக்களோடு பல்வேறு அமைப்பினரும் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

author avatar
kavitha