அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் …!!!

அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.  இது அமெரிக்க ஓப்பன் டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

Related imageதரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், 3-வது இடத்தில் உள்ள அர்ஜெண்டினா வீரர் டெல் போட்ரோவை இறுதிப்போட்டியில்  எதிர் கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் கையே ஓங்கி இருந்தது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-3, 7-6(4), 6-3 என்ற நேர் செட்களில் டெல் போட்ரோவை வீழ்த்தி பட்டம் வென்றார்.

Related image

இதுவரை ஜோகோவிச் ஒட்டுமொத்தமாக 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்களின் பட்டியலில் சுவிச்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ரபேல் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.அமெரிக்க ஓப்பன் டென்னிசில் பட்டம் வென்றதன் மூலம் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் 3-வது இடத்தை பீட் சாம்ப்ராஸ் உடன் பகிர்ந்துகொண்டார் ஜோகோவிச்.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment