அமெரிக்காவில் சுரங்கப்பாதை வழியாக போக்குவரத்து!மாதிரி வீடியோ வெளியிட்ட எலோன் மாஸ்க் நிறுவனம்!

சுரங்கப்பாதை வழியாக நடைபெறும் போக்குவரத்திற்கான பணிகளை ,அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் தொழிலதிபரான Elon Musk ன் நிறுவனம் மேற்கொண்டிருக்கும் நிலையில், அதற்கான மாதிரி வீடியோ ஒன்றை தனது Instagram பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸ்-ன் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்படும் இந்த  சுரங்கப்பாதை எப்படி செயல்படும் என்கிற மாதிரி வீடியோவில் சாலையில் பயணிக்கும் கார் ஒன்று, பூமிக்கு அடியில் பயணிக்கும் விதமாக சாலையின் மேற்புறம் அதற்காக அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் போய் நின்றவுடன், அது கீழிறங்கி சுரங்கப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பிறகு அந்த வாகனத்தை சுரங்கப்பாதை வழியே மணிக்கு 200 கிமீ வேகத்தில் அங்கிருக்கும் வாகனமொன்று சுமந்து பயணிக்கிறது. குறிப்பிட்ட இடம் வந்ததும் லிப்ட்டின் வழியே மீண்டும் சாலையின் மேற்பரப்பிற்கு அந்த வாகனம் கொண்டுசென்று சேர்க்கப்படுகிறது.

இதனால் நெரிசலான பகுதிகளை பூமிக்கடியில் வேகமாக கடந்துவிட முடியுமென்றும், இதில் பயணிப்பதற்கு பேருந்து கட்டணத்தைவிட குறைவான செலவே ஆகும் என்றும் Elon Musk குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment